ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து (W.P.NO.49910 OF 2016 DATE 30.07.2019 ) மேற்கோள் காட்டி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உயர்திரு முனைவர் ச.கண்ணப்பன் அவர்களை இன்று 13.09.2019 நேரில் சந்தித்து 2004 - 2006 தொகுப்பூதிய காலத்தை காலமுறை நாட்களாக பணிவரன்முறை செய்ய வேண்டுகோள் விடுத்து மனுக்கொடுத்தது

 விடுநர் :

 சா.அருணன்
 நிறுவனத் தலைவர்
 தமிழ்நாடு அகொள்கிறேன்்கள் நல கூட்டமைப்பு
===============
 பெறுநர் :

 உயர்திரு  டாக்டர் ச.கண்ணப்பன் அவர்கள்
 பள்ளிக்கல்வி இயக்குநர்
 பள்ளிக்கல்வி இயக்குனரகம்
 சென்னை - 600-006
===============

 பொருள் :

 2004 - 2006 ஆசிரியர்கள் பணி நியமனம் - தொகுப்பூதிய அடிப்படை- சென்ன உயர்நீதிமன்ற ஆணை மூலம் பணியில் சேர்ந்த நாளே முன்னுரிமை பெறுதல் - அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் அனுமதி வழங்க கோருதல் சார்ந்து
=============

 மேற்காணும் பொருள் சார்ந்து 2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டுவரை இடைநிலை, சிறப்பாசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலும் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் , முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வாரியத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு ஐந்து வருடம் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர் அதாவது இடைநிலை மற்றும் உடற்கல்வி ஓவிய ஆசிரியர்கள் உட்பட சிறப்பாசிரியர்களுக்கு மாதம் ரூ.3000/- மும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ. 4000/- மும் ,மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ. 4500/-மும்  என தொகுப்பூதியத்தில் பணியில் நியமிக்கப்பட்டனர்

 பின்பு 2004  - 31.05.2006 வரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அனைத்து அனைத்து வகை ஆசிரியர்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து 01.06.2006 முதல் கால முறை ஊதியத்தில் கொண்டு வந்தனர்

 ஆனாலும் அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் 31.05.2019 வரை பணப்பலன்கள் மற்றும் பதவி உயர்விற்கான முன்னுரிமையோ வழங்கப்படவில்லை,

 இந்நிலையில் பாதிக்கப்பட்ட 45,000 ஆசிரியர்களில் 24 பேர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து (W.P.NO.49910 OF 2016 DATE 30.07.2019 ) 2004 - 2006 வரை உள்ள  தொகுப்பூதிய காலத்தையும் பணப்பலன்கள் மற்றும் பதவி உயர்விற்குறிய பணிக்காலம் மற்றும் கருத்துருவிற்கான ஆணைப் பெற்றுள்ளனர்

 சென்னை உயர்நீதிமன்ற ஆணையை அடிப்படையாக கொண்டு 2004 - 2006 காலங்களில் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் பெற்ற அனைத்து வகை ஆசிரியர்களையும் பணியேற்ற நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி பணப்பலன்களையும் பதவி உயர்விற்கான முன்னுரிமையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி பேருதவி செய்திட ஐயா அவர்கள் ஆவணம் செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்

 சா.அருணன்
 நிறுவனத் தலைவர்
 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
 9445454044

 நகல் :
       உயர்திரு தொடக்கக் கல்வி   இயக்குநர் அவர்கள்
~~~~~
==================
 உடன்
 மாநில மாவட்ட நிர்வாகிகள்

 ம. ஜான்சன் , தா.மீகாவேல், ர.பரமானந்தம் , எம்.நிர்மலா ஆரோக்கியம் ,ஆர்.சீனிவாசன்,  கி.சூர்யபிரகாஷ் பி.ராமர், கோபாலகிருஷ்ணன் , பாஸ்கர், ச.செல்வக்குமார் சாஜகான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக