ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

ஈமக்காடுகள்

உலகின் மனித குலத்தில்முன் தோன்றிய மூத்த பெருங்குடி மக்கள் தமிழர்கள் தான்” என்று வரலாறு கூறுகிறது. பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு அவ்வப்போது வெளிப்பட்டு அக்கூற்றை மெய்ப்பிக்கிறது.

சங்க கால ஈமக்காடுகள் குறித்த ஒலிச்சித்திரம் ஒன்றைத் தயாரித்து வரும் மதுரை அகில இந்திய வானொலி நிலையம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கல்பதுக்கைகள் (ஈமக்கல்லறை) குறித்த ஆய்வில் இறங்கியது. இம்முயற்சிக்கு உறுதுணையாக, தானம் அறக்கட்டளை மேம்பாட்டிற்கான சுற்றுலா அணியின் திட்டத்தலைவர் பாரதி, வரலாற்றுப் பேராசிரியர் வெங்கட்ராமன், தொல்லியல் அறிஞர்வேதாசலம், சித்தர்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் கௌதம சித்தார்த், தொல்லியல் ஆர்வலர் இரா.சிவக்குமார் ஆகியோர் இணைந்துள்ளனர்.

மதுரைக்கு அருகே மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டஈமக்கல்லறைகள் இந்த ஆய்வுக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இக்கல்லறைகள் அனைத்தும் நமது முன்னோர்களின் “நீத்தார் வழிபாட்டு” முறையை உலகிற்குப் பறைசாற்றுகின்றன. சங்ககாலத்

திற்கு முற்பட்ட இனக்குழுக் காலத்தில் வாழ்ந்த மக்களின் நம்பிக்கையை இக்கல்லறைகள் வெளிக்காட்டுகின்றன. உலகம் முழுவதும் காணப்படும் கல்பதுக்கைகள் மற்றும் கல்திட்டைகளின் வடிவம் இங்கு நிறைந்துள்ளன. மதுரை வானொலி நிலைய நிகழ்ச்சி நிர்வாகியும், கல்பதுக்கைகள் தொடர்பான ஆய்வாளருமான இராஜராமன், “சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள நெடுநிலை நடுகல், குத்துக்கல் நடுகல், கற்குவை போன்ற சில வடிவங்களும் இவ்விடத்தில் நிறைந்து காணப்படுகின்றன ’’ என்கிறார்.

தேனி மாவட்டம் வருச நாட்டிற்கு அருகிலுள்ள வேம்பூலி, கொடைக்கானல் மலைப் பகுதியிலுள்ள தாண்டிக்குடி, ஆடலூர், பண்ணைக்காடு ஆகியபகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு புதிய செய்திகளை இக்குழு வெளிக் கொணர்ந்துள்ளது. அந்த ஆய்வின் தொடர்ச்சியாக மதுரைக்கு அருகில் அமைந்துள்ள நரசிங்கம்பட்டி பெருமாள் மலையின் அடிவாரத்தில் அடர்ந்த முட்புதர்களைக் கொண்டுள்ள இந்தஈமக்காட்டில் எங்கு திரும்பினாலும் கற்களாகவும் கற்குவியலாகவுமே தென்படுகின்றன.

மரம், மலை, ஆறுகளை வழிபடுவதற்கு முன்பாக பண்டைய மாந்தர்கள் இறந்துவிட்ட தங்களின் முன்னோர்களை வழிபட்டனர். உடல்களை எரித்த பின்பு மீதமிருக்கும் எலும்புகளையும், இறந்தோர் பயன்படுத்திய பொருட்களையும் ஓரிடத்தில் அவர்களின் நினைவாகப் புதைத்தனர். அவ்விடத்தை அடையாளம் கொள்வதற்காக செதுக்கிய பாறைகளைக் கொண்டு கல்லறைகளை ஏற்படுத்தினர். அவையே கல்திட்டைகள், கல்பதுக்கைகள் என்று அழைக்கப்பட்டன. இறந்து போன நமது முன்னோர்களை வணங்குகின்ற மரபு இன்றளவும் தொடர்ந்து நீடித்து வருகிறது. தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இறந்து போன முன்னோர்களை நினைத்து ஆறுகளில் குளித்து வருவது இந்த நம்பிக்கையின் தொடர்ச்சி எனக் கொள்ளலாம். ‘‘கோவில்களை அமைப்பது மற்றும் வழிபடுவதற்கான ஆகமமுறைகள் அனைத்தும் பண்டைய முன்னோர் வழிபாட்டு முறையிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். தற்போதைய கடவுள் வழிபாட்டிற்கான அத்தனை கூறுகளும் பண்டைய முன்னோர் வழிபாட்டு முறையில் புதைந்திருக்கிறது.” என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள வரலாற்றுப் பேராசிரியர்இரா.வெங்கட்ராமன்.

இறந்து போன நம் முன்னோர்களின் ஆன்மா இருப்பவர்களை வழி நடத்துகிறது என்ற நம்பிக்கையின் தொடர்ச்சி தான் மூத்தோர் வழிபாடு. நுண் கற்காலத்தில் இறந்தவர்களைப் புதைத்து விட்டுக் கற்களைக் கொண்டு சிறிய மேடு ஒன்றை உருவாக்கினர். இது கற்குவை என்றழைக்கப்பட்டது. பெருங்கற்காலத்தில் மலைப்பகுதியில்வாழ்ந்த மக்கள் பாறைகளிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கல்திட்டைகளை அமைத்தனர். சமவெளியில் வாழ்ந்த மக்கள் தரைக்குக் கீழேகுழி தோண்டி அதற்குள் கற்பலகைகளை இடது, வலது பக்கங்களில் செருகி தரையிலும் பதித்தனர். பிறகு மேலே தொப்பிக்கல் அல்லது மூடுகல் என்றழைக்கப்படுகின்ற கல்லைக் கொண்டு அவ்வறையை மூடினர்.

இக்கல்லறைக்கு அருகிலேயே சிறியதாக ஓர் அறையை அமைத்து அதற்குள் இறந்தவர் பயன்படுத்திய பொருட்களைப் புதைத்தனர். இறந்தவர்களிடம் தாங்கள் விடுக்கும் வேண்டுகோள் கேட்கும் வகையில் அறையின் கிழக்குப் புறமாக “பானை ஓட்டை” ஒன்றினையும் அமைத்தனர்.



ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பிரிட்டன்,கொரியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலிமற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில்எல்லாம் ஆங்காங்கே பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன இவற்றின் காலம்கி.மு.4 ஆயிரத்திலிருந்து கி.மு.3 ஆயிரம் வரைஎனத் தொல்லியலாளர்களால் வரையறை செய்யப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தை பெருங்கற்காலப் பண்பாடு என்று தமிழிலும் “மெகாலித்திக்பீரியட்” என்று ஆங்கிலத்திலும் அழைக்கின்றனர். ஏறக்குறைய இதே காலக்கட்டங்களில்உருவாக்கப்பட்ட கல்பதுக்கைகள், கேரளம்,தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறுமாநிலங்களில் காணப்படுகின்றன. ஈமச்சின்னங்கள் குறித்த கட்டமைப்பு உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்பட்




நமது தமிழர்

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

சித்தர்களின் அண்டவியல்


சித்தர்களின் அண்டவியல்

     குறும்பர்களிடம் இருந்து தப்பி காட்டிற்குள் புகுந்த பண்டைகால காஞ்சியின் மன்னர் தொண்டைமான் இளந்திரையன், ரோமசர் என்ற சித்தரிடமிருந்து அண்டவியல் உபதேசம் பெற்றதாக ரோமசர் பற்றிய நூல்கள் கூறுகின்றன.

உபதேச சுருக்கம்

     இந்த உபதேசத்தில் அவர் பூமியின் வயது, சூர்ய குடும்ப தோற்ற மறைவு, அண்டத்தின் வயது ஆயுள், அண்டவியல் அலகுகள் போன்றவற்றை குறிப்பிடுகிறார். மேலும் ஒவ்வொரு பிரம்மா இறக்கும் போதும் தன் உடலில் இருந்து ஒரு முடி உதிர்வதாகவும், தற்போது அவர் 71 பிரம்மாக்களை பார்த்துள்ளதால் 71 முடிகள் உதிர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

பூமியின் வயது

     பூமியின் வயதை கணக்கிட 432ஐ 10 லட்சத்தால் பெருக்க வேண்டும் என்கிறார். அதாவது பூமியின் வயது 432 கோடியே 10 லட்சம் ஆண்டுகள் என்கிறார்.
விஞ்ஞானம்

     இன்றைய விஞ்ஞானம் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என கணிக்கிறது.
சூர்ய குடும்ப ஆயுள் தொகு

     பிரம்மாவின் ஒரு நாளே சூர்ய குடும்ப ஆயுள் என்கிறார். அதாவது சூர்ய குடும்ப ஆயுள் 864 கோடி ஆண்டுகள் என்கிறார். பிரம்மாவின் ஒரு நாள் முடியும் போது 14 லோகங்களில் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் மட்டுமே அழியும் என்றும், மற்ற 11 லோகங்கள் ஒவ்வொரு பிரம்மா இறக்கும் போது அழியும் என்கிறார்.

இன்றைய விஞ்ஞானம்

      சூர்ய குடும்ப ஆயுள் 900 கோடி ஆண்டுகள் என கணிக்கிறது.

அண்டம் 

     இந்த அண்டத்தின் வயது 155 லட்சத்தி 52 ஆயிரம் கோடி ஆண்டுகள் (பிரம்மாவின் 51ஆம் ஆண்டு துவக்கம்) என்கிறார்.
அதைப்போல் அண்டத்தின் ஆயுள் 311 லட்சத்தி 4 ஆயிரம் கோடி ஆண்டுகள் (பிரம்மாவின் ஆயுள்) என்கிறார்.


விஞ்ஞானம்

இன்றைய விஞ்ஞானம்

அண்டத்தின் வயது 1300 கோடி ஆண்டுகளுக்கு மேல் என கணிக்கிறது.[5][6]

அகிலாண்டம் தொகுப்புகள்


     சூரபதுமன் (கந்த புராணம்) என்ற அவுன தேச அரக்கன், 1008 அண்டங்களை ஆளும் வரத்தை சிவனிடமிருந்து பெற்றதாக கூறுகிறார்.
விஞ்ஞானம்

     இன்றைய விஞ்ஞானம் இதை போன்ற பல்லண்டங்களை மல்டிவெர்சு (multiverse) என கூறுகிறது.




நன்றி

விக்கிப்பீடியா